சினிமா பிரதான செய்திகள்

விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா – கலைமாமணி விருது அறிவிப்பு


விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சினிமாத் துறையில்,

2011
நடிகர்கள் – ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ்,
நடிகை – குட்டி பத்மினி,
நகைச்சுவை நடிகர் – பாண்டு,
நடன இயக்குனர் – புலியூர் சரோஜா
பாடகி – சசி ரேகா

2012
நடிகர்கள் – என்.மகாலிங்கம், எஸ்.எஸ்.செண்பகமுத்து,
நடிகைகள் – டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி
கானா பாடல் கலைஞர் – உலகநாதன்
இயக்குனர் – சித்ரா லட்சுமணன்

2013
நடிகர், இயக்குனர் – சி.வி.சந்திரமோகன்
பாடகர் – ஆர்.கிருஷ்ணராஜ்
நடிகர் – பிரசன்னா,
நடிகை – நளினி
பழம்பெரும் நடிகைகள் – குமாரி காஞ்சனா தேவி, சாரதா
நடிகர்கள் – ஆர்.பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன்
நாட்டுப்புறப் பாடற்கலைஞர் – வேல்முருகன்
நாட்டுப்புறப் பாடகி – பரவை முனியம்மா

2014
நடிகர்கள் – கார்த்தி, சரவணன், பொன்வண்ணன்
இயக்குனர் – சுரேஷ் கிருஷ்ணா
பாடகி – மாலதி
நடன இயக்குனர் – என்.ஏ.தாரா

2015
நடிகர் – பிரபுதேவா
இயக்குனர் – ஏ.என்.பவித்ரன்
இசையமைப்பாளர் – விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் – யுகபாரதி
ஒளிப்பதிவாளர் – ஆர்.ரத்தினவேலு
பாடகர் – கானா பாலா

2016
நடிகர்கள் – சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி

2017
நடிகர்கள் – விஜய் சேதுபதி, சிங்கமுத்து,
நடிகை – பிரியா மணி
இயக்குனர் – ஹரி
இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா

2018
நடிகர்கள் – ஸ்ரீகாந்த், சந்தானம்
தயாரிப்பாளர் – ஏ.எம்.ரத்தினம்
ஒளிப்பதிவாளர் – ரவிவர்மன்
பாடகர் – உன்னி மேனன்

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.