பிரதான செய்திகள் விளையாட்டு

சர்வதேச போட்டிகளில் 500 அதிகமான சிக்சர்கள் -கிறிஸ் கெய்ல் சாதனை

இங்கிலாந்துக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டியின் போது 162 ஓட்டங்களை பெற்ற மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளில் 500 அதிகமான சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்

நேற்று முன்தினம் இங்கிலாந்திற்கெதிராக நடைபெற்ற போட்டியில் கிறிஸ்கெயில் 14 சிக்சர்களை அடித்ததன் மூலம் அவர் சர்வதேச போட்டிகளில் 506 சிக்சர்களை அடித்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்

துடுப்பெடுத்தாட ஆரம்பித்தவுடன் கிறிஸ்கெயில் இங்கிலாந்தின் கிறிஸ்வோக்சின் முதல் ஒன்பது பத்துகளில் ஐந்து சிக்சர்களை அடித்துள்ளார்

மேலும் ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை பெற்ற இரண்டாவது மேற்கிந்திய வீரர் என்ற சாதனையையும் கிறிஸ்கெய்ல் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.