இலங்கை பிரதான செய்திகள்

யாழ் மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினரால் கைது


எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து இலங்கை மீனவர்கள் இருவரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்-பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு மீனவர்களும் காரைக்காலில் இருந்து 24 கடல் மைல் தூரத்தில் மீன்பிடியில் ஈடுப்பட்ட போது ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எல்லைதாண்டி வந்து விட்டதாக தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.