பிரதான செய்திகள் விளையாட்டு

இந்தியா – அவுஸ்திரேலியாவுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று


இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இருபதுக்கு 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

அந்தவகையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று சனிக்கிழமை பகல்-இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச தொடர் இது என்பதனால் இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இந்தப் போட்டி நடைபெறும் ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 5 போட்டிகளில் ; இந்திய அணி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்விகரைளயும் சந்தித்துள்ளது.அதேவேளை இந்த மைதானத்தில் இந்தியாவை இரு தடவைகள் அவுஸ்திரேலியா வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.