பிரதான செய்திகள் விளையாட்டு

ரோஜர் பெடரர் 100-வது பட்டத்தை வென்றுள்ளார்

22 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் விளையாடி வரும் ரோஜர் பெடரர் ஒற்றையர் பிரிவில் 100-வது சர்வதேச பட்டத்தை வென்றுள்ளார். துபாயில் நடைபெற்று வந்த ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் சுவிட்சலாந்தின் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் கிரீசின் 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டு 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார்

பெடரர் துபாய் சம்பியன்ப் பட்டத்தை வெல்வது இது 8-வது முறையாகும். 22 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடி வரும் ரோஜர் பெடரருக்கு, ஒற்றையர் பிரிவில் இது 100-வது சர்வதேச பட்டமாக அமைந்துள்ளது.

‘ஓபன் எரா’ வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை 37 வயதான பெடரர் பெற்றுள்ளாh அமெரிக்காவின் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.