கென்யாவில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானியும் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள துர்கானா ஏரியின் நடுவில் உள்ள சிறிய தீவில் உள்ள தேசிய பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகொப்டர் தரையிறங்கும்போது, எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து விபத்துள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விபத்தில் கென்யாவைச் சேர்ந்த விமானியும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment