சினிமா பிரதான செய்திகள்

மீண்டும் ஹன்சிகாவுடன் இணையும் சிம்பு


சிம்பு, ஹன்சிகா மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர். ‘மஹா’ படத்தில் ஹன்சிகாவின் புகை பிடிக்கும் படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்க படக்குழுவோ படப்பிடிப்பில்  ஈடுபடுகின்றது.

இப்போது சிம்புவும் ‘மஹா’ படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி வந்துள்ளது. ஸ்ரீகாந்த், ஹன்சிகா நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கின்றார். சிம்பு தற்போது உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனில் உள்ள அதி நவீன பயிற்சி நிலையத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.
‘மஹா’ படத்தின் படப்பிடிப்பை துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். சிம்பு, ‘மஹா’ படத்துக்காக மொத்தம் 10 நாள்கள் படப்பிடிப்புக்களை கொடுத்துள்ளார். `ஷோயப்’ எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். சென்னையிலிருந்து இயக்குனர் ஜமீல், படக்குழுவுடன் துருக்கிக்கு கிளம்ப, சிம்பு லண்டனில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.
அங்கே சிம்பு, ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘மஹா’ படத்தில் சிம்பு, ஹன்சிகா மீண்டும் இணைந்து நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.