இலங்கை பிரதான செய்திகள்

யாழில் வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்றுமாறு எச்சரிக்கை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழில். வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு ( CCTV) கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. குறித்த கடிதத்தில் , தங்கள் வீடுகளுக்கு முன்பாக உள்ள கமராக்களை தாமதிக்காமல் உடனே கழட்டவும் , அல்லது வீதியை பார்க்காது உள்ளே பூட்டவும் , நம்ம தோழர்கள் சிலர் மாட்டி இருக்கிறாங்க ஆகவே உடனடியாக மாத்தவும் , இந்த எச்சரிக்கையை மீறினால் , உங்கள் மீதும் தாக்குதல் விரைவாக நடத்தப்படும்.என குறிப்பிடப்பட்டு உள்ளது.

யாழில் நடைபெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகளை காவல்துறையினர் சிசிரிவி கமரா ஆதாரங்களை கொண்டு கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.