பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி…


இலங்கைக்கெதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பைத் தெரிவுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி தென்னாபிரிக்க அணி 45.1 ஓவரில் 251 ஓட்டங்கள் பெற்றது.

இதனையடுத்து 252 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.  இந்தநிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. அதேவேளை இந்தப் போட்டியின் போது தென்னாபிரிக்க அணித்தலைவர் பெப் டு பிலெசி 57 ஓட்டங்களைப் பெற்றதுடன் சர்வதேச ஒருநாள் அரங்கில் 5,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.