சினிமா பிரதான செய்திகள்

கார்த்தியும் ஜோதிகாவும் இணைந்து நடிக்கவுள்ளனர்


ஜீத்து ஜோசப் இயக்கும் த்ரில்லர் படத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடத்து வருகின்றார். கதாநாயகியே இல்லாத இந்தப் படத்தின் 80 வீதமான படப்பிடிப்பு ; முடிந்துவிட்டன.
இந்தப் படத்துக்குப் பின்னர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ள கார்த்தி இதையடுத்து பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ள த்ரில்லர் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இதில் ஜோதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தின் அம்சங்கள் பிடித்துப்போனதனால் ஜோதிகா உடனே ஒப்புதல் அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜோதிகா இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து ஜீத்து ஜோசப்பின் படத்தில் ஓகஸ்ட் மாதத்தில் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீத்து ஜோசப் இயக்கிய பாபநாசம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் கார்த்தி, ஜோதிகா இணையும் படத்துக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.