இந்தியா பிரதான செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் திகதி இன்று அறிவிப்பு – ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் பயன்படுத்த தடை

2019 பாராளுமன்ற தேர்தல் திகதியின் இன்று மாலை தேர்தல் ஆணையகம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு தேர்தல் ஆணையகம் ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதன் போது 2019 பாராளுமன்ற தேர்தல் திகதியை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறாமல் உள்ள 21 தொகுதிகளுக்கான திகதியும் அறிவிக்கப்படும் எனவும் பாராளுமன்ற தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தேர்தல் பிரச்சாரத்தின் போது, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் யாரும், எந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், மற்றும் அவர்களது செயல்பாடுகள் குறித்து படங்களை பிரச்சாரங்களிலும், விளம்பரங்களிலும் பயன்படுத்தக் கூடாது எனவும் தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.