இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

யட்டியாந்தோட்டையில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது


யட்டியாந்தோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட யட்டியாந்தோட்டை கபுலுமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 3 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யட்டியாந்தோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கி ஒன்றும், கட்டு துப்பாக்கி ஒன்றும், சோட் கண் ஒன்றும் மற்றும் 12 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 63 வயதுடைய சந்தேக நபரை ருவான்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபர் மேற்படி துப்பாக்கிகளை எதற்காக வைத்துள்ளார்? இவற்றை எங்கிருந்து எடுத்து வந்தார்? போன்ற கேள்விகளுக்கு விசாரணைகள் மூலம் விடை காணுமாறும் நீதவான் காவல்துறையினர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யட்டியாந்தோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.