
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியினை 71 ஓட்டங்களினால் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மலிங்க தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முன்னர் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்றையதினம் டர்பனில் பகலரவு ஆட்டமாக நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 332 எனற் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின் போது மழை குறுக்கிட்டதனால் டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு 24 ஓவர்களுக்கு 193 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 121 ஓட்டங்களைப் பெற்று, 71 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.
இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளையும் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இவ்விரு அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி நாளைமறுதினம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Add Comment