இந்தியா பிரதான செய்திகள்

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்….

அந்தமான் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வீதிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த மாதம் அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவிலும், ஜனவரி மாதம் நிகோபார் தீவுகளில் 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers