Home உலகம் போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி வைக்க சீன அரசு உத்தரவு..

போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி வைக்க சீன அரசு உத்தரவு..

by admin

எத்தியோப்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தினைத் தொடர்ந்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
எத்தியோப்பிய அரசுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ்-8 விமானம், நேற்றையதினம் கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்திருந்தனர்.

விபத்து தொடர்பாக அதிகாரிகள் உயர்மட்ட விசாரணையைத் ஆரம்பித்துள்ள நிலையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் உடனடியாக தரையிறக்கி, வர்த்தகரீதியிலான சேவையை நிறுத்தி வைக்கும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் தீவிரமாக பரிசோதனை செய்து, அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கும் என சீனாவின் சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More