உலகம் பிரதான செய்திகள்

போப் ஆண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை

போப்பாண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகரான கார்டினல் ஜோர்ஜ் பெல்லுக்கு எதிரான பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 75 வயதான அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த கார்டினல் ஜோர்ஜ் பெல் மீது 1970-ஆம் ஆண்டுகளில் தம்மை தவறாக நடந்ததாக 40 வயதைக் கடந்து விட்ட 2 ஆண்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

அதேபோன்று 1980-ம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜோர்ஜ் பெல் ஆபாசமாக தோன்றியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், மெல்போர்ன் நகரில் ஆர்ச் பிஷப்பாக பணிபுரிந்தபோது, உள்ளூர் மத குருமார் மீது வந்த பாலியல் முறைப்பாடுகளை அவர் சரியான விதத்தில் கையாள வில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு குறித்த விசாரணை மெல்போர்ன் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இரு ஆண்களை துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காக கார்டினல் ஜோர்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap