வடமாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நேற்று (13) நடைபெற்றது
இதன்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டும் என்று கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் எழுத்துமூலம் நேரடியாக இதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் கையளித்துள்ளனர்.
மேலும் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கவேண்டிய தமது கோரிக்கைகளை இந்த பொதுமக்கள் சந்திப்பின் போது கையளித்தனர்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றினர்.
Spread the love
Add Comment