பிரதான செய்திகள் விளையாட்டு

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஒசாகா தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுப் போட்டியில் ஜோகோவிச் மற்றும் நவோமி ஒசாகா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரீபரை சந்தித்த நிலையில் 4-6, 4-6 என்ற நேர்செட்டில் தோல்வியடைந்துள்ளார்.

ஜோகோவிச்சிடம் தொடர்ச்சியாக 11 முறை தோல்வி கண்ட கோல்ஸ்கிரீபர் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதேவேளை ஸ்பெயினின் ரபெல் நடால் அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் ஸ்வார்ட்ஸ்மானை 6-3, 6-1 என்ற நேர்செட்டில வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.இதேவேளை பெண்கள் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்றுப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனையான நவோமி ஒசாகா 3-6, 1-6 என்ற நேர்செட்டில் சுவிட்சலாந்தின் பெலின்டா பென்சிச்சிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.