உலகம் பிரதான செய்திகள்

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கி சூடு – பலர் உயிரிழப்பு

நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று அதிகளவான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த நபர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்த நிலையில் தாக்குலாளி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ள போதிலும் மசூதிக்குள் பலர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுவதுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாகவும் அங்கும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.தாக்குதலைத் தொடர்ந்து நகரின் அனைத்து வீதிகளையும் மூடி குற்றவாளிகளை தேடி வருகின்ற காவல்றையினர் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers