இலங்கை பிரதான செய்திகள்

இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் விபத்து – ஒருவர் பலி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மோதியதில் வீதியில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் விபத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து பாரவூர்தியும் ;, சாரதியும் கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி அக்கராயன் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய சந்தியாபிள்ளை பீற்றர் இமானுவேல் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும், குறித்த விபத்து இரவு 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கிளிநாச்சி போக்குவரத்து காவல்துறை பொருப்பதிகாரி ஜி எல் ஏ ஜே குணவர்தண தெரிவித்துள்ளார்.

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.