இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

“END OF MY LIFE GOOD BYE GOD” என பேஸ்புக்கில் பதிவிட்டு நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை

தலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு  அருகாமையில்  இன்று  (2019.03.16)  மாலை 3.30 மணியளவில் இளைஞன் ஒருவன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த எம். கிலின்டன் எலஸ்ட் வயது 24  என்றும் காவல்துறையினர்  மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

திடீர் என நீர்தேகத்தில் பாய்வதனை கண்ட பிரதேசவாசிகள் காவல்துறையினருக்கு அறிவித்ததனை தொடர்ந்து காவல்துறையினர்ர் மற்றும் கடற்படையினர் சடலத்தினை சுமார் 4.30 மணியளவில் மீட்டுள்ளனர்.

நீர்தேகத்தில் பாய்வதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பு குறித்த இளைஞன் மேற்படி பாய்ந்த நீர்தேகத்திற்கு முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தனது முகப்புத்தகத்தில் “END OF MY LIFE GOOD BYE GOD” என எழுதி புகைப்படத்தையும் பதிவிட்டு நீர்தேகத்தில் பாய்ந்துள்ளார். குறித்த இளைஞனின் சடலம் புலன் விசாரணையின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

காதல் விவகாரம் காரணமாக இவர் தற்கொiலை முயற்சியில் ஈடுப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணம் உண்டா என தலவாக்கலை காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.