பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கெதிரான 5வது போட்டியிலும் வெற்றி – தொடரை 5-0 என தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது

South Africa’s Andile Phehlukwayo, center, celebrates the dismissal of Sri Lanka’s Niroshan Dickwella with teammates during their fifth one-day international cricket match in Colombo, Sri Lanka, Sunday, Aug. 12, 2018. (AP Photo/Eranga Jayawardena)

இலங்கைக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்கா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 40.3 ஓவர் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 226 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி 28 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்ற நிலையில் டக்வர்ட் லுவிஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதனடிப்படையில் தென்னாபிரிக்கா அணி 5 – 0 என்ற ரீதியில் தொடரை கைப்பற்றியுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.