உலகம் பிரதான செய்திகள்

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்..

2 ஆம் இணைப்பு – நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், டிராமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிதாரி தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தப்பிச் சென்று துப்பாக்கியுடன் நடமாடும்  அவர் மீதே அனைத்து கவனங்களும் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலைகள் தமது கதவுகளை முடிவைக்குமாறும், வெளியில் அநாவசியமாக நடமாடுவதை குறித்த பகுதிகளில் தவிர்குமாறும் காவற்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தீவிரவாத தாக்குதலா என விசாரணை…

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு அவசர சேவைகளும் அழைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிதாரி சம்பவ இடத்தில் இருந்து காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்பது குறித்து தாம் விசாரித்து வருவதாக, காவற்துறையினர்  கூறியுள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு மூன்று  உலங்குவானூர்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

“ஒருவர்  துப்பாக்கியை எடுத்து கொடூரமாக சுடத் தொடங்கினார்” என சம்பவத்தை நேரில் பார்த்தவர் டச் நியூஸ் வலைதளத்திடம் தெரிவித்துள்ளார். 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நகரம் முழுவதும், டிராம் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு

படத்தின் காப்புரிமைEPA

Thanks – BBC

Emergency services surrounded the tram in the city square (@lilianbruigom)

 

Armed police at the scene of the shooting (EPA)

 

Several people were injured in the incident (AP)

 

Emergency services swooped on the area (EPA)

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers