Home இலங்கை ‘தீர்த்த கலைஞர்களின் பயிற்சிப்பட்டறை’

‘தீர்த்த கலைஞர்களின் பயிற்சிப்பட்டறை’

by admin

சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகமும், தீர்த்த சர்வதேச கலைஞர்கள் குழுவும் இணைந்து நடாத்தவுள்ள ‘தீர்த்த கலைஞர்களின் பயிற்சிப்பட்டறை’ ஆனது நிறுவக பணிப்பாளர் கலாநிதி. சி. ஜெயசங்கரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கட்புல தொழில்நுட்ப கலைத்துறையின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் 20ம் திகதி எமது நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.

சமகால கலைப்போக்கிற்கு இணங்க உடலாற்றுகையுடன் தொடர்பான கலைவெளிப்பாட்டுப் பயிற்சிப் பட்டறையாகவே இது அமையப்பெறவுள்ளன. இலங்கையில பல பகுதிகளில் ‘Texting Being” எனும் கருத்தாக்கத்தின் கீழ் இடம்பெற்றுவரும் பயிற்சிப்பட்டறையின் தொடர் நிகழ்வாக இது அமையப் பெறவுள்ளன. காண்பிய கலைஞர்கள், ஆற்றுகை கலைஞர்கள், மற்றும் கவிதையாளர்கள் எனும் பல கலைஞர்கள் ஒன்றிணைந்து செயற்படும் ஓர் நிகழ்வாகும்.

சர்வதேச கலைஞர்களான Ajai Sharma ( India), Diniz Sanchez (Portugal), Teetin Rangher( India), Mahmoud Maktabi(Iran), Mamta Sagor( India), Park Jihgoung (south korea), ) மற்றும் உள்ளுர் கலைஞர்களான Bandu manamperi ( Colombo), Godwin Contantine( Colombo), Janani Kure( Colombo), Kirushan Sivananam ( Betticaloa  இணைந்து நடாத்தவுள்ளனர்.

ஒரு பனுவலின் ஊடகத்தனத்தையும் உடலின் ஊடகத்தனத்தையும் கேள்விக்குட்படுத்தி புhரம்பரிய சென்னெறிவாதப் பண்புகளுக்குட்பட்ட உடல்சார் பொருண்மைகளுக்கு அப்பால் சமகாலத்தில் பின் கட்டமைப்புவாத சிந்தனைகளுக்குட்படுத்தி சமகால தொழில்நுட்ப வளர்ச்சியும் சமுக பொரளாதார மற்றும் தத்துவங்கள் ஒன்றிணையும் நிலவரத்தை உடலாற்றுகை மூலமாக வாசிப்புக்குட்படுத்ததக்கவகையில் அமையபெறவுள்ளன.

ஆற்றுகைக்கலை தொடர்பான பயிற்சிப்பட்டறை காலை சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும், பொதுவெளி ஆற்றுகையானது கல்லடி கடற்கரை திடலில் மாலை 4.00 மணியளவில் இடம்பெறவுள்ளன.

இஃப்பத் நீதா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More