இந்தியா பிரதான செய்திகள்

கர்நாடக> கட்டிட இடிபாடுகளில் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அச்சம்..


கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த இடிபாடுகளில், சுமார் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் தார்வாட் பகுதியில், கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்தத, 6 மாடி கட்டிடம் ஒன்றே இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. அடுத்தகட்ட பணிகளுக்காக இன்று மீண்டும் கட்டுமானம் தொடங்கியது. அதன்போதே கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.6 மாடிகளும் இடிந்து மொத்தமாக தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு உள்ளே 70 மக்கள் வரை சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கு தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மீட்கப்பட்ட சில பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடிபாடு எதனால் நிகழ்ந்தது என்ற முழுமையான விவரம் இன்னும் வெளியாகவில்லை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.