சினிமா பிரதான செய்திகள்

விக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம் வானம் கொட்டட்டும்


விக்ரம் பிரபு நடிக்கும் திய படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனசேகரன் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகின்றார்.

படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கின்றது. இதில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் பிரபுவின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் ஏனைய கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப் படவுள்ளதாக இயக்குனர் தனசேகரன் அறிவித்துள்ளார்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers