இலங்கை தொடர்பான பிரேரணை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இன்று (21) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பிரித்தானியா – ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைமையில் கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான இந்த பிரேரணையை முன்வைத்துள்ளன.
இந்தத் தீர்மானத்துக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளும் இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment