பிரதான செய்திகள் விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றையதினம் 12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் போட்டியிடவுள்ளன.

இந்த 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே மாதம் 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை போட்டியிட்டு முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும். ஆரம்ப லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ரோயல் சலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இந்திய நேரம் 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.