பிரதான செய்திகள் விளையாட்டு

லசித் மலிங்க ஓய்வு குறித்து அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான தலைவர் லசித் மலிங்க சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டியின் போது இலங்கை அணி 16 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலககிண்ண போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 உலகக்கிண்ண போட்டியுடன் இருபதுக்கு – 20 போட்டியிலிருந்தும் ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
35 வயதான லசித் மலிங்க நேற்று இடம்பெற்ற தென்னப்பிரிக்கா அணியுடனான போட்டியில் ரீசா ஹென்றிஸின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இருபதுக்கு – 20 போட்டிகளில் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.