இலங்கை பிரதான செய்திகள்

திருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை

குளோபல் தமிழ்செய்தியாளர்


மன்னார்-மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருகேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் சட்டத்தரணி ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை மன்னார் காவல் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.

அருட்தந்தை ஒருவர் உற்பட 10 பேர் இவ்வாறு சட்டத்தரணி ஊடாக மன்னார் காவல் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.

இவர்களில் மூன்று பெண்களும்,ஆறு ஆண்களும் அடங்குகின்றனர்.குறித்த 10 பேரிடமும் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட மன்னார் காவல்துறையினர் பின்னர் அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்;.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ அருட்தந்தையினை சொந்தப் பிணையிலும், ஏனைய 9 பேரையும் 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல அனுமதித்ததுடன் இம்மாதம்; 29 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.