தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கினால் அதில் தானே நடிப்பதற்கு தயாராக இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் இளையராஜாவின் 75ஆவது பிறந்தநாள் விழா இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இசை அமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியும், பாடல்கள் எழுதியும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளதாகவும். மாணவர்களே கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுமா? என்று கேட்ட போது தன்னுடைய வாழ்க்கை வரலாறை சுயசரிதையாக எழுதி வருவதாகவும் விரைவில் அது வெளியாகும் என்றும் கூறிய இளையராஜா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் தானே நடிக்க தயாராக இருப்பதாகவும் மூன்றே நாட்களில் படமாக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் தான் இசையமைத்த பாடல்களை இளையராஜா பாடினார்.
Add Comment