இலங்கைக்கெதிரான இருபதுக்கு 20 தொடரை 3-0 என தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 199 என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதன் காரணமான போட்டி 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இலங்கை அணி 15.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்துள்ளது
இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 போட்டியின் முதல் இரு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியிருந்த தென்னாபிரிக்க அணி நேற்று ஜோகன்னஸ்போர்க்கில் இடம்பெற்ற 3 ஆவதும் இறுதியுமான போட்டியில் வெற்றி பெற்றதன் முலம் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது
இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியிருந்ததுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா 5 – 0 எனக் கைப்பற்றியிருந்த நிலையில் இருபதுக்கு 20 தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment