உலகம் பிரதான செய்திகள்

மாலியில் கிராம மக்கள் மீது தாக்குதல் 130 பேர் கொல்லப்பட்டனர்…

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கிராம மக்கள் மீது தோகோன் இனத்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகின்ற நிலையில் தோகோன் பழங்குடியினர் அடிக்கடி புலானி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி அதிகளவானோரை கொன்று வருகின்றனர்.

இந்த நிலையில், மோப்டி பிராந்தியத்தில் புலானி மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு கிராமத்துக்குள் நேற்று முன்தினம் புகுந்த தோகோன் இனத்தவர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 130 பேர் கொல்லப்பட்டனர் எனவும் தொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.