உலகம் பிரதான செய்திகள்

மியன்மாரில் வெடிமருந்து கிடங்கொன்றில் தீ 16 பேர் பலி 48 பேர் படுகாயம்..

மியன்மாரில் வெடிமருந்து கிடங்கொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 48 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று முன்தினம் மாலை வெடிமருந்தினை எடுத்துச் செல்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் கிடங்குக்கு சென்று வெடிமருந்தை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்கு வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கிடங்குக்குள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தமையினால் கிடங்கில் இருந்தவர்கள் வெளியேற முடியாதநிலையேற்பட்டதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்ற போதும் அதற்குள் 16 பேர் தீயில் சிக்கி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காயமடைந்த 48 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap