இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீரில் வாக்குப்ப்பதிவு நடைபெறும் நாட்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்…

காஷ்மீரில் வாக்குப்ப்பதிவு நடைபெறும் நாட்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்ததனையடுத்து அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானிலுள்ள அவர்களது முகாம்களை குண்டுகளை வீசி அழித்தது.

இதனையடுத்து இந்தியாவின் தாக்குதலால் ஆத்திரம் அடைந்துள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் எனவும் தேர்தல் சமயத்தில் தாக்குதல் முயற்சிகளில் ஈடுபட உள்ளதாகவும் உளவு துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நாட்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் 5 கட்டமாக தேர்தல் நடைபெவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.