சினிமா பிரதான செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கும் அதர்வா

,
தற்போது 100 என்ற திரைப்படத்தில் நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படத்தின் மறு உருவாக்கத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா.

இந்த படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றிருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பக்கபலமாக அமைந்தது.

இந்நிலையில் இந்தத் திரைப்பபடம் தெலுங்கில் மறு உருவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில் சித்தார்த் வேடத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் மிருணாலினி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.