உலகம் பிரதான செய்திகள்

இஸ்ரேல் எல்லையில் ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் டீமற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டு தினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் இன்று ஒன்றுகூடிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனிய இளைஞர்களில் சிலர் இஸ்ரேல் ராணுவம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதனையடுத்து அவர்கள் மீது ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ; 4 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் 316 பேர் காயமடைந்தனர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap