சீனாவின் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லியாங்ஷான் யி பகுதியில் உள்ள 4,800 மீட்டர் உயரம் கொண்ட மலை பகுதியின் உள்ளடங்கிய வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டதனை தொடர்ந்து தீயை அணைப்பதற்காக 689 பேரை தீயணைக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த தீ அணைப்பில் ஈடுபட்டிருந்தவர்களில் 30 பேர் வரை காட்டு தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment