இலங்கை பிரதான செய்திகள்

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மீண்டும் விளக்கமறியல்


முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்த நிலையலி அவரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்ததனையடுத்து நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை மன்றில் சமர்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.