இந்தியா பிரதான செய்திகள்

பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை வட்ஸ்-அப் அறிமுகம் செய்துள்ளது.

பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை வட்ஸ்-அப் சமூக வலைத்தளம் இந்தியாவில் நேற்றையதினம் அறிமுகம் செய்துள்ளது.  இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் இவ்வாறு வட்ஸ்-அப் சமூக வலைத்தளம் இவ்வாறு பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, வட்ஸ்-அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வரும் சந்தேகத்துக்கிடமான ஒரு செய்தியின் நம்பகத்தன்மையை அறிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செக்பொயிண்ட் டிப்லைன் எனும் தொழில்நுட்பத்துக்கு அந்த செய்தியை அனுப்ப வேண்டும். அதனை அந்தா மையம் சரிபார்த்து, அது உண்மையானதா? பொய்யானதா? சர்ச்சைக்குரியதா? என்ற தகவலை வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும்.

படங்கள், வீடியோ லிங்க், எழுத்து வடிவம் என பலவகையான செய்திகளை இந்த மையம் ஆய்வு செய்யும் எனவும் இந்த சேவை, ஆங்கிலத்திலும், இந்தி, தெலுங்கு, வங்காளம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap