பிரதான செய்திகள் விளையாட்டு

டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வென்றுள்ளது


நேற்றையதினம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியினை ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி தலைவர் புவனேஸ்வர் குமார் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 130 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 131 ஓட்டங்களையெடுத்த நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை இன்றையதினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிடவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.