உலகம் பிரதான செய்திகள்

ஜோ பிடென் மீது, மேலும் 3 பெண்கள் பாலியல் முறைப்பாடுளை மேற்கொண்டுள்ளனர்..

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது மேலும் 3 பெண் பாலியல் முறைப்பாடுளை மேற்கொண்டுள்ளனர்.  அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜோ பிடன் மீது இவ்வாறு பாலியல் முற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்குவதற்கு பரிசீலித்து வருகின்ற நிலையில், பெண்கள் சிலர் அவர் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர், ஒருவர், ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் 3 பெண்கள் ஜோ பிடென் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னாள் துணை ஜனாதிபதி மீது தொடர்ந்து 7 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.