பிரதான செய்திகள் விளையாட்டு

பெங்களூரை கொல்கத்தா 5 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது

ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது லீக் போட்டியில் பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 206 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசலின் சிறப்பான துடுப்பாட்டத்தினால் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. ரசல் 13 பந்துகளில் 7 சிக்சர்கள், 1 பவுண்டரி அடங்கலாக 48 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers