இலங்கை பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் உயிரிழப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாகியதில் பின்னிருக்கையிலிருந்து பயணித்த இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்துள்ளார்;

இந்தச் சம்பவம் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. துன்னாலை வடக்கைச் சேர்ந்த 18 வயதான கதிர்காமநாதன் கஜீபன் என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியது. அதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். எனினும் பின்னிருக்கையில் பயணித்த இளைஞர் தூக்கி எறியப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த மற்றைய இளைஞர் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.