இலங்கை பிரதான செய்திகள்

படையினர் வசமிருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன


பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே மேற்படி 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட காணிகளுள் 81 சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை எனவும், 90 சதவீதமான தனியாருக்குரியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் 6வது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே, இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 6,951 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், இன்னும் 475 ஏக்கர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தற்போது படையினர் வசம் 13,497 ஏக்கர் காணிகளே உள்ளதாகவும், அவற்றுள் 11,039 ஏக்கர் அரச காணிகள் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.