பிரதான செய்திகள் விளையாட்டு

பெங்களுரை 4 விக்கெட்டுக்களால் டெல்லி வென்றுள்ளது


ஐ.பி.எல். தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியை 4 விக்கெட்டுக்களால் டெல்லி கப்பிடல்ஸ் அணி வென்றுள்ளது.நேற்றையதினம் பெங்களூர் எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து 150 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை 4 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியினால் டெல்லி அணி 6 புள்ளிகளை பெற்றுள்ள அதேவேளை பெங்களூர் அணி எந்த போட்டியிலும் வெற்றிபெறாமல் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.