உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்.


அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென பதவிவிலகியுள்ளார்.  மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், குடும்பமாக வரும் அகதிகளை பிரிந்து தனிதனியாக காவல் மையங்களில் அடைப்பது உள்ளிட்ட டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை கிர்ஸ்ட்ஜென் நீல்சென்னே அமல்படுத்தி உள்ளார்.

இவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் விசுவாசியாக இருந்தபோதிலும், அகதிகள் விவகாரத்தில் ; போதியளவு கடுமை காட்டவில்லை என கிர்ஸ்ட்ஜென் நீல்சென் மீது டிரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கிர்ஸ்ட்ஜென் நீல்சென் நேற்று திடீரென பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார்.

பதவிவலகுவதற்கான காரணம் எதையும் குறிப்பிடாத கிர்ஸ்ட்ஜென் நீல்சென் பதவியை துறக்க இதுதான் சரியான தருணம் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கிர்ஸ்ட்ஜென் நீல்சென் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட டிரம்ப், தற்காலிக உள்துறை மந்திரியாக சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு கமிஷனர் கெவின் மெக்லீயன் பொறுப்பு வகிப்பார் என கூறினார்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.