இலங்கை பிரதான செய்திகள்

நெல்லியடியில் சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பியர் ரின்களுடன் இருவர் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட காவல்துறையினர்; அதற்குள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பியர் ரின்களை மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி உரிமையாளர் மற்றும் அதில் இருந்தவரையும் காவல்துறையினர்; கைது செய்துள்ளனர்.

புது வருடத்தை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் சட்டவிரோதமாக பியர் கடத்தப்படுவதாக நெல்லியடி காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்த நிலையில் 13ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் நெல்லியடி நகர் ஊடாக சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை மறித்து ; சோதனையிட்டனர்.

அதில் 85 பியர் ரின்கள் மீட்கப்பட்டதாகவும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர்; தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.