பிரதான செய்திகள் விளையாட்டு

ஐதராபாத்தை 39 ஓட்டங்களால் டெல்லி வென்றுள்ளது.

12வது ஐ.பி.எல். தொடரின் 30 ஆவது போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கப்பிடல்ஸ் அணி வென்றுள்ளது. நேற்றிரவு ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் ஆரம்பமான போட்டியில்; நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 156 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.  இப் போட்டியின் ஆட்டநாயகனாக டில்லி அணியின் கீமோ போல் தெரிவுசெய்யப்பட்டார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap