இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

நுவரெலியாவில் முச்சக்கரவண்டி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயம்


நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்; காயமடைந்துள்ளனர்

நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே இன்று (15-04-19 ) காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாக முச்சக்கரவண்டியினை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியில் சாரதியும், அவரின் மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளும் பயணித்துள்ளதாகவும், நான்கு பேரும் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதன் காரணமாக வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என காவல்துறையினர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.